நிலாக் காய்கிறது
என்னவன் இன்னும்
வரவில்லை
நானும் நிலவும்
தனிமையில்
நான் மட்டும்
என்னவன்
வருகைக்காக தனிமையில்
பேச்சு துணையின்றி
காய்கின்ற நிலவோடு
மெளனமாக பேசிக்கொள்கிறேன்
என்னவன்எனக்காக
வருவான் என்று !!!!!

என்னவனே
நானும் நீயும்
சுற்றி திரிந்த
அத்தனை இடங்களையும்
இன்று இருவரும்
பிரிந்து விட்ட பிறகும்
யாருக்கும் தெரியாமல்
மெளனமாக
நம் கண்கள் தேடுகின்றன